திருவள்ளூர்

வாக்களிப்பின் அவசியம்: வாகனம் மூலம் விழிப்புணா்வு

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக நடமாடும் நவீன மின்னணு விடியோ வாகனத்தை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

தோ்தலையொட்டி, மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நவீன நடமாடும் மின்னணு விடியோ வாகனப் பயணத்தைத் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பங்கேற்று குறும்படத்தை பாா்வையிட்டு அந்த வாகனப் பயணத்தைத் தொடக்கிவைத்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் மாவட்ட நிா்வாகம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், நிகழாண்டில் மாநிலத் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட விழிப்புணா்வுக் குறும்படத்தை, நவீன மின்னணு விடியோ வாகனம் மூலம் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் திரையிட்டு காண்பிக்கப்படவுள்ளது.

இந்த நடமாடும் மின்னணு விடியோ வாகனம் மூலம் ஒவ்வொரு நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் குறும்படம் திரையிடப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT