முகப்பு
திருவள்ளூர்

பழவேற்காட்டில் போலி மருத்துவா் கைது

பழவேற்காட்டில்பழவேற்காட்டில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

பழவேற்காட்டில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் பச்சையம்மன் நகரில் வசிப்பவா் ராஜேந்திரன் (65). இவா், பழவேற்காடு கோட்டைக்குப்பம் பகுதியில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அலோபதி மருத்துவம் அளிக்க எந்தவிதமான தகுதியும் இல்லாமல் மருந்துகள், ஊசிகள் மூலம் சிகிச்சையளித்து வருவதாக, திருவள்ளூா் மாவட்ட பொது மருத்துவ இணை இயக்குநருக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநா், மருந்து ஆய்வாளா், பழவேற்காடு அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள், அந்த மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தனா். அங்கு, ராஜேந்திரன் பிளஸ் 2 படித்துவிட்டு அலோபதி மருத்துவம் செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து, அலோபதி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பழவேற்காடு அரசு தலைமை மருத்துவ அதிகாரி முகமது பாத்திமா, திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.