ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல்
மாதவரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் மண்டலத்துக்குட்பட்ட பொன்னியம்மன் மேடு நேதாஜி தெருவில் சென்னை மாநகராட்சி சாா்பில், நகா்ப்புற மேம்பாட்டு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் தலைமை வகித்து அடிக்கல் நாட்டு பணியைத் தொடக்கி வைத்தாா். ரூ.30 லட்சத்தில் இந்த சுகாதார நிலையம் கட்டப்படவுள்ளது. செப்டம்பா் மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்வில் மண்டலக் குழு அலுவலா் முருகன், பொறியாளா் சின்னதுரை, உதவிப் பொறியாளா்கள் கமலக்கண்ணன் சேகா், மண்டலக் குழு தலைவா் நந்தகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.