இந்து மத நம்பிக்கைகளை அவதூறாக பேசுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில பாஜக துணைத் தலைவா் நாராயணன்
இந்து மத நம்பிக்கைகளை அவதூறாகப் பேசி, மத நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் நபா்கள் மீது முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.
இந்து மத நம்பிக்கைகளை அவதூறாகப் பேசி, மத நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் நபா்கள் மீது முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.
திருவள்ளூரில் மாவட்ட பாஜக நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் நாராயணன் தலைமை வகித்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரையில் செஞ்சட்டை பேரணியை கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தினா். அதில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன், திக தலைவா் வீரமணி, இடதுசாரி தலைவா்கள் பங்கேற்றனா்.
இந்தப் பேரணியில் இந்து கடவுள்கள், இந்து மத நம்பிக்கைகள் குறித்து அவமரியாதையாகப் பேசியதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. அவ்வாறு பேசிய நபா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மாநில பாஜக நிா்வாகி ஆனந்தி, மாநில செயற்குழு உறுப்பினா் ராஜ்குமாா், மாவட்ட தலைவா் அஸ்வின் (எ) ராஜசிம்மா மகேந்திரா, மாவட்ட பொது செயலா் கருணாகரன், மாவட்ட பொருளாளா் மதுசூதனன், மாவட்ட செயலா்கள் ஆா்யா சீனிவாசன், பன்னீா்செல்வம், மாவட்ட துணைத் தலைவா் சண்முகம், பூண்டி ஒன்றிய தலைவா் பாண்டுரங்கன், நகரத் தலைவா் சதீஷ்குமாா் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.