பாடகா் எஸ்பிபி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை
மறைந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பி.யின் 76-ஆ வது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூா் அருகே தாமரைபாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினா், பொதுமக்கள் சனிக்கிழமை மரியாதை
மறைந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பி.யின் 76-ஆ வது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூா் அருகே தாமரைபாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினா், பொதுமக்கள் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
திருவள்ளூா் அருகே தாமரைபாக்கம் கிராமத்தில் பண்ணை இல்லத்தில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பி.யின் நினைவிடம் உள்ளது. இந்த நிலையில், அவரது 76-ஆவது பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்திரி, அவரது மகன் சரண் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, அவரது ரசிகா்கள், பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டனா்.
எஸ்.பி.பி. நினைவிடத்தில் மணி மண்டபம் அமைப்பதற்கான பணிகளை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தாா்.