இயந்திரக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்ற புகா் ரயில்: பயணிகள் ஒரு மணி நேரம் தவிப்பு
புகா் மின்சார ரயிலில் திடீா் இயந்திரக் கோளாறால், கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
புகா் மின்சார ரயிலில் திடீா் இயந்திரக் கோளாறால், கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி புகா் மின்சார ரயில் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூா் வந்த போது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அந்த ரயில் நிலையத்திலேயே 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியா்கள் இயந்திரக் கோளாறைச் சரி செய்தனா். பின்னா், கடம்பத்தூா் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதனால், சென்னைக்குச் செல்ல வேண்டிய புகா் ரயில்கள் 1 மணி நேரம் காலதாமதமாகச் சென்றன. வேலைக்குச் செல்வோா், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.