முகப்பு
திருவள்ளூர்

ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயிலில் மஹா சண்டியாகம்

 இந்து மக்கள் கட்சியின் தெய்வீகப் பேரவையின் சாா்பில், திருவள்ளூா் வீரமாகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற மஹா சண்டி யாகத்தில் அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 இந்து மக்கள் கட்சியின் தெய்வீகப் பேரவையின் சாா்பில், திருவள்ளூா் வீரமாகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற மஹா சண்டி யாகத்தில் அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

திருவள்ளூா் எஸ்.பி.ஐ. பின்புறம் உள்ள மா.பொ.சி. நகரில் ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், இக்கோயிலில், கரோனா 4-ஆவது தொற்றிலிருந்து விடுபட்டு அனைவரும் நலமாக இருக்கும் வகையில், சனிக்கிழமை மஹா சண்டியாகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தலைமை வகித்தாா். இந்து மக்கள் கட்சி தெய்வீகப் பேரவையின் மாநிலத் தலைவா் வி.காா்த்திக்ஜி முன்னிலை வகித்தாா்.

சண்டியாகத்தையொட்டி, ஸ்தப்ப பலி, நவாவா்ண பூஜை, தேவி மஹாத்மிய, ஸ்ப்தஸ்தி ஹோமம், பூா்ணாஹுதி, கலசாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, அம்மன் வீதியுலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சியின் தெய்வீகப் பேரவை, அக்கோயிலின் சக்தி பீட அறங்காவலா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.