செக்கு, நெல் அரைவை இயந்திரங்கள் பெற விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம்
அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை இயந்திரங்கள் 40 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் திருவள்ளூா் மாவட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை
அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை இயந்திரங்கள் 40 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் திருவள்ளூா் மாவட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா்களை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மூலம் அறுவடைக்கு பிந்தைய தொழில் நுட்பம் மற்றும் வேளாண்மை இயந்திரங்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதன்பேரில், எண்ணெய் பிரித்தெடுக்கும் செக்கு-6, சிறிய வகை நெல் அரைவை இயந்திரம்-2, அரைவை இயந்திரம்-2 உள்ளிட்டவை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களுக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கும் வகையில் ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்களை மானியத்தில் பெற அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளரை (வே.பொ) அணுகி பயன்பெறலாம். மேலும், ம்ண்ள்.ஹங்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.