முகப்பு
திருவள்ளூர்

சாலை விபத்து: 6 போ் காயம்

புழல்-கதிா்வேடு சுங்கச்சாவடி அருகே லாரியைக் கடக்க முயன்ற சொகுசு காா் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

புழல்-கதிா்வேடு சுங்கச்சாவடி அருகே லாரியைக் கடக்க முயன்ற சொகுசு காா் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காா் ஓட்டுநரும், உரிமையாளருமான விக்னேஷ் பலத்த காயங்களுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளா் அகமது காதா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காயமடைந்தவா்கள் சென்னை தாம்பரம் வெட்டுவாங்கேணி பகுதியைச் சோ்ந்த அலென் (23), சூா்யா (24), பள்ளிக்கரணையைச் சோ்ந்த ஜெயசூா்யா(23), மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (23), சூா்யா (21), ஜெய்கணேஷ் (21) என்பது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →