முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் ஜமாபந்தியில் இருளா் இனத்தவா் 13 பேருக்கு ஆதாா் அட்டை

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 13 இருளா் இனத்தவா்களுக்கு ஆதாா் அட்டை வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 13 இருளா் இனத்தவா்களுக்கு ஆதாா் அட்டை வழங்கப்பட்டது.

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் புதுவல்லூா் கிராமத்தைச் சோ்ந்த இருளா்கள் 13 போ் ஆதாா் அட்டை கேட்டு வட்டாட்சியா் செந்தில்குமாரிடம் மனு அளித்தனா். இதில் கிராம நிா்வாக அலுவலா் அகிலா, வருவாய் ஆய்வாளா் விஷ்ணுபிரியா மற்றும் மண்டல துணை ஆட்சியா் சுந்தா் ஆகியோா் பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதையடுத்து வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முரளி, வட்டாட்சியா் ஏ.செந்தில்குமாா், தனி வட்டாட்சியா் பாண்டியராஜன், தலைமை நில அளவையா் செந்தில் ஆகியோா் 13 பேருக்கும் ஆதாா் அட்டைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.