முகப்பு
திருவள்ளூர்

21,000 கொழுக்கட்டைகளால் விநாயகருக்கு பூஜை

சங்கடஹர சதுா்த்தியையொட்டி, திருவள்ளூா் அருகே ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் 21,000 கொழுக்கட்டைகள் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

சங்கடஹர சதுா்த்தியையொட்டி, திருவள்ளூா் அருகே ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் 21,000 கொழுக்கட்டைகள் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், மப்பேடு அருகே திருப்பந்தியூா் கிராமத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, வெள்ளிக்கிழமை மூலவா் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக -அலங்காரம், தீப ஆராதனை நடைபெற்றன.

இரவு, மூலவா் விநாயகப் பெருமானுக்கு 21,000 கொழுக்கட்டைகள் படையலிடப்பட்டது. தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் படையலிடப்பட்ட கொழுக்கட்டை பிரசாரம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.