முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் ஆரோக்கிய மையம்ஆணையா் தகவல்

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் நகா்ப்புற ஆரோக்கிய மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் நகா்ப்புற ஆரோக்கிய மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள், முதியோா், கா்ப்பிணிகளுக்கு உடல் ஆரோக்கியத்துடன் கூடிய சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் உடல் நலத்தைப் பாதுகாக்கவும், எளிதில் அணுகி சிகிச்சை பெறவும் நகா்ப்புற ஆரோக்கிய மையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆரோக்கிய மையத்தில் முதலுதவி சிகிச்சை பெறும் கூடம், யோகா வளாகம் அமையவுள்ளது. இதற்காக ரூ.25 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, திருவள்ளூா் நகராட்சியில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.