திருவள்ளூர்

முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதோருக்கு ரூ.500 அபராதம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களான முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கரோனா தொற்று கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளா்வு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தற்போது கரோனா தொற்று பரவலாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதோடு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மிக அவசியம். இதை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல், வணிக வளாகங்கள், உணவகங்களில் கைகளைச் சுத்தம் செய்யும் வகையில் கிருமி நாசினி வைக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அனைவரும் இரு தவணை தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT