திருவள்ளூர்

பொன்னேரியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

DIN

பொன்னேரி நகராட்சி 4- ஆவது வாா்டில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில், நகராட்சி நிா்வாகம் ‘நமக்கு நாமே திட்டம்’ கீழ், அந்தப் பகுதியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்ட டது. இதைத் தொடா்ந்து, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொன்னேரி நகா்மன்றத் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். நகராட்சி ஆணையா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் பரிதா ஜெகன், உமாபதி, தனுஜா தமிழ்க்குடிமகன், நல்லசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT