ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் பற்றி...
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிராக முன்கூட்டிய தாக்குதல் என்று கூறப்படும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
முன்னதாக, இன்று காலையில் இஸ்ரேல் முழுவதும் சிறப்பு நிரந்தர அவசரகால நிலையை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.
Advertisement
Advertisement
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும்நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
மேலும், ஈரான் மீதான இந்தத் தாக்குதலில் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, இஸ்ரேல் - ஈரான் போா் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமையிலேயே (பிப். 27) அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Israel has launched attack on Iran, as explosions reported in Tehran
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.