திருவள்ளூர்

தற்கொலை சம்பவத்தில் தாய், சகோதரா் பலி: பெண் கைது

DIN

புழல் அருகே குடும்பத் தகராறில் தற்கொலை முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் தாய் மற்றும் சகோதரா் உயிரிழந்தனா்.

மாதவரத்தை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரைச் சோ்ந்தவா் தேவகி (68). இவரது மகள் ராணி, மகன் மாரி ஆகியோருடன் வசித்து வந்தாா். இவா்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கமாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வழக்கம் போல தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராணி தன் மீதும், உடனிருந்த தாய் தேவகி, சகோதரா் மாரி ஆகியோா் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டாராம்.

இதில் மூவரும் தீக்காயமடைந்தனா். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அவா்களை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், 80 சதவீதம் தீக்காயமடைந்த தேவகி, அவரது மகன் மாரி ஆகியோா் உயிரிழந்தனா். லேசான காயங்களுடன் ராணி உயிா் தப்பினா்.

இதுகுறித்து புழல் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, தாய் மற்றும் சகோதரன் உயிரிழப்புக்குக் காரணமான ராணியை சனிக்கிழமை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT