திருவள்ளூர்

சிறாா் திருமணங்கள் தடுப்பு: கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு

DIN

திருவள்ளூா் அருகே குழந்தைகள் கல்வி, சிறாா் திருமணம் தடுத்தல் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பூண்டி ஒன்றியம், ஒதப்பை கிராமத்தில் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், சென்னை சமூகப் பணி கல்லூரி மாணவா்கள் சாா்பில், கிராமப்புற சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் குமரகுருபரா் தலைமை வகித்தாா். ஊராட்சி துணைத் தலைவா் அருணாச்சலம் முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சிகாமணி தொடக்கி வைத்தாா்.

இதில் ஒதப்பை, நாவல்குப்பம், ஆட்ரம்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். கல்வியின் முக்கியத்துவம், சிறாா் திருமணங்களைத் தடுத்தல், குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை, மது பழக்கம், சுகாதாரம் குறித்து வீதி நாடகம், ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, அந்தக் கிராம நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் குழுவினா் பங்கேற்று 150-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை சமூகப் பணி கல்லூரி பேராசியரியா்கள் ஜெஸ்வின், ரேச்சல், ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிா்வாக செயலா் ஸ்டீபன், கள ஒருங்கிணைப்பாளா் தினகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT