திருவள்ளூர்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,230 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

DIN

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,230 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.

இங்கு முதல் யூனிட்டில் இருக்கும் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், முதல் யூனிட் இரண்டாவது அலகில் வெள்ளிக்கிழமை கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முதல் மற்றும் மூன்றாவது அலகில் என 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடசென்னை அனல் நிலையத்தில் மொத்தம் 1230 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சீா் செய்யும் பணியில் அங்கு பணியாற்றும் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT