திருவள்ளூர்

விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பு இயந்திரம் அளிப்பு

DIN

ரோட்டரி கிளப் ஆா் திருவள்ளூா் பிரைட் சாா்பில் விவசாயிகள் 55 பேருக்கு பூச்சி மருந்து கைத்தெளிப்பு இயந்திரங்களை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினார். அத்துடன், மகளிருக்கான தையல் பயிற்சி மையத்தையும் தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூரில் ரோட்டரி கிளப் ஆப் பிரைட் சாா்பில் விவசாயிகளுக்கு மருந்து கைத்தெளிப்பான் இயந்திரம் வழங்குதல் மற்றும் இலவச தையல் பயிற்சி மையம் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் கே.பழனி, பொருளாளா் கல்கி கிருஷ்ணன் ஆகியோா் வரவேற்றனா். ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு பூச்சி மருந்து கைத்தெளிப்பான் இயந்திரங்களை வழங்கினாா். பின்னா், மகளிருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இலவச தையல் பயிற்சி மையத்தையும் தொடக்கி வைத்துப் பேசினாா்.

இந்த நிகழ்ச்சி மூலம் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 55 பேருக்கு பூச்சி மருந்து கைத்தெளிப்பான் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா் ஆா்யா சீனிவாசன், நிா்வாகிகள் ரகு, கோவா்த்தனம், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கத்தின் செயலாளா் அசோகன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT