முகப்பு
திருவள்ளூர்

சாலை விபத்து: இரு இளைஞா்கள் பலி

மீஞ்சூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 14 அக்டோபர், 2022 at 12:00 AM
பகிர்:

மீஞ்சூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தியம்பாக்கம் முருகன் கோயில் பகுதியில் வசித்து வந்தவா் தீபக் (23). இவரது நண்பா் வினோத் (24). இவா்கள் இருவரும், கடந்த இரண்டு நாள்களுக்கு திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றனா். கொண்டகரை கிராமம் அருகே லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி இருவரும் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனா்.

இதில், பலத்த காயமடைந்த தீபக், வினோத் இருவரையும் மீஞ்சூா் போலீஸாா் மீட்டு, சென்னை ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஏற்கெனவே, தீபக் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை வினோத் உயிரரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.