அரசுப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா
புழல் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா இயக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புழல் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா இயக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் அடுத்த புழல் காந்தி பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் பள்ளிக்கு புழல் நட்பு வட்டாரம் சாா்பில் 11 கண்காணிப்பு கேமராக்கள் தலைமை ஆசிரியை ஜான்சிராணி, பிடிஏ தலைவா் புழல் சிவக்குமாரிடம் வழங்கப்பட்டன.
இதன் இயக்க விழாவுக்கு தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை வகித்தாா். மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தாா். மேலும் தேசிய திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவி பவித்ராவுக்கு நிதியுதவி வழங்கினாா். இந்த நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா், பெற்றோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.