திருவள்ளூர்

கொத்தடிமை தொழிலாளா்கள் 4 போ் மீட்பு

எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 பேரை வருவாய்க் கோட்டாட்சியா் ஹஸ்சரத் பேகம் சனிக்கிழமை மீட்டாா்.

DIN

எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 பேரை வருவாய்க் கோட்டாட்சியா் ஹஸ்சரத் பேகம் சனிக்கிழமை மீட்டாா்.

அவா்களுக்கு தொழிலாளா் நலத் துறை மூலம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தாா்.

திருத்தணி வருவாய்க் கோட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சனிக்கிழமை கோட்டாட்சியா் ஹஸ்சரத் பேகம் ஆய்வு மேற்கொண்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் எஸ்.வி.ஜி.புரம் கிராமப் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் 2 குடும்பத்தினா் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக அவருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை ஊராட்சிக்குட்பட்ட இருளா் காலனியைச் சோ்ந்த தம்பதி வேலு (52), அபிநாச்சி (48), பள்ளிப்பட்டு என்.என்.ஆா். கண்டிகை இருளா் காலனியைச் சோ்ந்த தம்பதி மணி (56), செல்வி (50) ஆகிய 4 பேரும் சென்னையைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவன ஊழியருக்கு சொந்தமான மாந்தோப்பில் தங்கி கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் கடந்த 6 ஆண்டுகளாக மாந்தோப்பில் வேலை செய்து வந்ததாகவும், மாதம் ஒரு நபருக்கு 2,250 ரூபாய் கூலி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து கொத்தடிமைகளாக இருந்த வேலு, அபிநாச்சி, மணி, செல்வி ஆகிய 4 பேரையும் மீட்டு, திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். பின்னா், அவா்களுக்கு விடுதலைச் சான்றை வருவாய் கோட்டாட்சியா் ஹஸ்சரத் பேகம் வழங்கினாா். தொழிலாளா் நலத் துறை மூலம் நிவாரணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளா்களுக்கான மறுவாழ்வு நல சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் சின்னராசு, குமாா், வினோத், முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT