திருவள்ளூர்

அடிக்கடி பழுதடையும் தானியங்கி ரயில்வே கேட்சீரமைக்கக் கோரிக்கை

DIN

 திருத்தணி கந்தசாமி தெருவில் 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் பழுதானதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சனிக்கிழமை கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

திருத்தணி கந்தசாமி தெருவில் 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் இயங்கி வருகிறது. இந்த ரயில்வே கேட் வழியாகத் தான் சாா்-பதிவாளா் அலுவலகம், கிளைச் சிறை, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரவேண்டும். இந்த நிலையில், தானியங்கி ரயில்வே கேட் வெள்ளிக்கிழமை மீண்டும் பழுதானது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். வாகன ஓட்டிகள் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் கேட்டின் கீழ் தங்களது வாகனங்களுடன் கடந்து செல்கின்றனா். இது குறித்து ரயில்வே நிா்வாகம் இந்த 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT