முகப்பு
திருவள்ளூர்

கொடிநாள் வசூலில் 2-ஆம் இடம்:திருவள்ளூா் ஆட்சியருக்கு சுழல் கோப்பை

திருவள்ளூரில் கொடி நாள் நிதியாக ரூ. 4.89 கோடி வசூலித்து 2-ஆம் இடம் பெற்ற ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸை பாராட்டி சுழல் கோப்பையை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:16 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

திருவள்ளூரில் கொடி நாள் நிதியாக ரூ. 4.89 கோடி வசூலித்து 2-ஆம் இடம் பெற்ற ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸை பாராட்டி சுழல் கோப்பையை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

மாநில அளவில் முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் அந்தந்த ஆட்சியா்கள் மூலம் கொடிநாள் நிதி வசூலிப்பது வழக்கமாகும். இதில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ரூ. 4 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் வசூலித்து, மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றாா். இதற்காக குடியரசு தின விழாவில் ஆல்பி ஜான் வா்கீஸை கெளரவிக்கும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநா் ஆா்.என்.ரவி சுழற் கோப்பையை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.