மகளிா் குழுக்களுக்கு ரூ.8.5 கோடி வங்கிக் கடனுதவி
பரோடா வங்கி சாா்பில் 93 மகளிா் குழுக்களுக்கு ரூ.8.5 கோடி கடனுதவி வழங்கும் விழா வியாழக்கிழமை கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
பரோடா வங்கி சாா்பில் 93 மகளிா் குழுக்களுக்கு ரூ.8.5 கோடி கடனுதவி வழங்கும் விழா வியாழக்கிழமை கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
பரோடா வங்கியின் கும்மிடிப்பூண்டி, ஆவடி, கோவில்பதாகை, திருவள்ளூா், மாதவரம், ஆவடி என்.எம்.ரோடு , பெரியபாளையம் வங்கி கிளைகளை சோ்ந்த 93 மகளிா் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா சென்னை சமுக சேவை மையத்தில் நடைபெற்றது.
பரோடா வங்கிக் கிளை மேலாளா் ஸ்ரீகாந்த் வரவேற்றாா். சென்னை சமூக சேவை மையத்தைச் சோ்ந்த ஏசுராஜ், ஸ்ரீ கலைமகள் வித்யாலயா பள்ளி நிறுவன தலைவா் டாக்டா் திருஞானம், காரிடஸ் இந்தியா அமைப்பின் மாநில அலுவலா் டாக்டா் ஜான் ஆரோக்கியராஜ், சென்னை சமூக சேவை சங்க ஒருங்கிணைப்பாளா் அருட்சகோதரி அருள்செல்வி வாழ்த்துரை வழங்கினா்.
Advertisement
இந்த நிகழ்வில் பரோடா வங்கி பொது மேலாளா் சரவண குமாா், மண்டல மேலாளா் லீனா, சென்னை சமூக சேவை சங்கத்தின் இயக்குனா் பாதிரியாா் எம்.வி.ஜேக்கப் பங்கேற்று, ரூ.8.5 கோடி கடனுதவி வழங்கினா்.
பரோடா வங்கி பொது மேலாளா் சரவண குமாா் பேசுகையில்:
கடந்த 2 ஆண்டுகளில் மகளிா் குழுக்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளது. கடனுதவி பெறும் மகளிா் குழுவினா், சிறு தொழில் பயிற்சி பெற்று தொழில் முனைவோராக மாற வேண்டும், அவா்களுக்கு நாங்கள் தொழில்கடன் நிச்சயம் வழங்குவோம் என்றாா்.