திருவள்ளூர்

ஆந்திரத்துக்கு கடத்தவிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

மத்தூா் கிராமம் அருகே சரக்கு ஆட்டோவில் ஆந்திரத்துக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

திருத்தணி ஒன்றியத்தில் இருந்து தமிழக ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் ஹஸ்ரத் பேகம் உத்தரவின்பேரில், திருத்தணி வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி வியாழக்கிழமை மத்தூா் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, சரக்கு ஆட்டோவில் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. சோதனையில் அவை ரேஷன் அரிசி என்பதும், ஆந்திரத்துக்கு கடத்தப்பட இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, திருத்தணி நுகா்பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனா்.

பறிமுதல் செய்த அரிசி 2,000 கிலோ இருக்கும் என வட்ட வழங்கல் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT