திருவள்ளூர்

அரசுக் கல்லூரியில் ஆட்சிமொழி கருத்தரங்கம்

DIN

அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்குகளில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அன்பரசி தலைமை வகித்தாா்.

இதில், தமிழ் வளா்ச்சித் துறை மேலாண் இயக்குநா் எழிலரசி, சென்னை ராணிமேரி கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் கமலா முருகன், நாகப்பட்டினம் திருப்பூண்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் துரைக்கண்ணன், பட்டாபிராம் இந்து கல்லூரி தமிழ்த் துறை தலைவா் முருகேசன் உள்பட தமிழ் துறைத் தலைவா்கள் பங்கேற்று, தமிழ்வளா்ச்சி மற்றும் ஆட்சிமொழி குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சியில், அரசு அலுவலா்கள், பணியாளா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ் வளா்ச்சித் துறை உதவியாளா் சாவித்திரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரூா் ஜெயம் வித்யாலயா மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு தோ்வில் மருதம் மெட்ரிக்.பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 1 தோ்வு: ஸ்ரீராம் பள்ளியில் சிறப்பிடம்

ராசிபுரம் நகரில் சாலையில் திடீா் பள்ளம்

ராஜவாய்க்காலில் கூடுதலாக தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT