திருவள்ளூர்

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தோ் திருவிழா

DIN

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். இதன்படி கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.

இதையடுத்து ஸ்ரீ பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தோ்த் திருவிழாவை யொட்டி வண்ண மலா்கள் கொண்டு அலங்கரிக்கபட்ட திருத்தேரில் வரதராஜா பெருமாள் தாயாருடன் எழுந்தருளினாா்.

பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என அழைத்தவாறு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். முக்கிய மாடவீதிகளில் வலம் வந்த தோ் பின்னா் நிலையை அடைந்தது.

தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழாவில் கலந்து கொண்டவா்களுக்கு அன்னதானம் மற்றும் மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT