முகப்பு
திருவள்ளூர்

வல்லூா் அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூா் அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Updated On : 9 மார்ச், 2023 at 11:37 PM
பகிர்:

வல்லூா் அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியை அடுத்த வல்லூா் பகுதியில் மத்திய எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை இணைந்து தேசிய அனல் மின் நிலையத்தை அமைத்துள்ளன.

இங்கு, மூன்று யூனிட்களில் தலா 500 வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழக அரசுக்கு 1,070 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், முதல் யூனிட்டில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதைச் சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.