முகப்பு
திருவள்ளூர்

சோழவரம் அருகே ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு

 மீஞ்சூா் அருகே ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 9 மார்ச், 2023 at 11:36 PM
பகிர்:

 மீஞ்சூா் அருகே ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

மீஞ்சூரில் இருந்து நெமிலிச்சேரி வரை செல்லும் 400 அடி சாலையோரத்தில், பெரியமுல்லைவாயல் கிராமம் அருகே தனியாா் சிலா் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பொன்னேரி வட்டாட்சியா் செல்வகுமாா், நில அளவைத் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது தனியாா் சிலா், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் பெரியமுல்லைவாயல் பகுதியில் 1 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிப்பு செய்து சிறு கடைகள், குடிசைகள் கட்டியிருந்ததை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தின் (22 ஏக்கா் 3 சென்ட்) தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி என்று பொன்னேரி வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.