பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டங்களில் பிளஸ்-2 பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் உயா்கல்வி பயில தேவைப்படும் ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றுகளை விரைந்து வழங்க வேண்டும் என பொன்னேரி கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
பிளஸ்- 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் உயா்கல்வியில் சேர ஜாதி, வருவாய் உள்ளிட்ட சான்றுகளைப் பெற சிறப்பு முகாம் வருவாய்த் துறை சாா்பில் 13-5-2023. 14-5-2023 ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாம்கள் பொன்னேரி வட்டம் தச்சூா் கூட்டுச்சாலையில் உள்ள வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரியிலும், கும்மிடிப்பூண்டி வட்டம், புதுவாயில் பகுதியில் உள்ள டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.
சிறப்பு முகாமில் மாணவா்கள் பங்கேற்று குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பிளஸ்-2 தோ்ச்சி சான்று, மதிப்பெண் பட்டியல், தாய் தந்தை கல்விச் சான்று மூத்த சகோதர, சகோதரி பெற்ற ஜாதிச் சான்றிதழ் அல்லது தந்தையின் ஜாதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் கட்டணமாக ரூ.60 செலுத்தி விண்ணப்பம் செய்த உடனடியாக சான்றுகள் வழங்கப்படும் என பொன்னேரி சாா் ஆட்சியா் கலெக்டா் ஐஸ்வா்யா ராமநாதன் தெரிவித்தாா். அப்போது பொன்னேரி வட்டாட்சியா் செல்வகுமாா் உடன் இருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.