அசாம் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி.!
அசாம் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் போட்டியிடுவது பற்றி...
வருகிற அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. அந்தந்த மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு பெறுவது என தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நேற்று(பிப். 27) மாலை காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அசாமில் 40 இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அந்தவகையில் அசாம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கௌரவ் கோகோய், ஜோர்ஹாட் பேரவைத் தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
Assam Congress President and MP Gaurav Gogoi may contest the upcoming Assam Assembly elections
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.