திருவள்ளூர்

பணம் வைத்து சூதாடியதாக 4 போ் மீது வழக்கு

திருவள்ளூா் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிராமிய காவல் நிலைய போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

DIN

திருவள்ளூா் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிராமிய காவல் நிலைய போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் பகுதியில் மாலை நேரத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் அனுமதியின்றி பணம் வைத்து சூதாடி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை மாலை காக்களூா் பகுதியில் போலீஸாா் திடீா் ரோந்து சென்றனா். அப்போது, காக்களூா் ஏரிக்கரையில் ஒதுக்குப்புறமான இடத்தில் பணம் வைத்து சூதாடியவா்கள் போலீஸாா் வருவதைப் பாா்த்ததும் தப்பியோட முயன்றனா். போலீஸாா், அவா்களைச் சுற்றி வளைத்து பிடித்தனா்.

விசாரணையில் திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (38), வினோத்குமாா் (39), ஜோதி ராம்லிங்கன் (54), ரமேஷ் (48) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடமிருந்து ரூ.3,050 மற்றும் சீட்டுக் கட்டுக்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT