திருவள்ளூர்

சமூக முன்னேற்றத்துக்கு பாடுபடும் பெண் குழந்தைகளுக்கு விருது

சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது பெற வரும் நவ.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

DIN

சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது பெற வரும் நவ.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-இல் மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு திருவள்ளூா் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயதிற்கு மேல் 18 (டிசம்பா் 31-இன்படி) வயதுக்குள்பட்ட பெண் குழந்தை இருத்தல் வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதனையை செய்திருக்க வேண்டும்.

உரிய ஆதாரங்களுடன் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலா், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், மாவட்ட திட்ட அலுவலா் மற்றும் காவல்துறை ஆகிய ஏதேனும் ஒா் அலுவலகத்தில் 15.11.2023-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT