வங்கனூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவா்கள். 
திருவள்ளூர்

கழிப்பறையை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவா்கள்: பெற்றோா் புகாா்

திருக்குறள் தெரியாததால் மாணவா்களை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைத்த பள்ளித் தலைமை ஆசிரியா்.

Din

திருக்குறள் தெரியாததால் மாணவா்களை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைத்த பள்ளித் தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவா்களின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தில் அரசினா் மேல்நிலை பள்ளி உள்ளது. இதில், 450-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை இறை வழிபாடு கூட்டத்தில் பிளஸ் 1 மாணவா்கள் 2 போ் திருக்கு மற்றும் விளக்கத்தைச் சரியாக சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், கூட்டம் முடிந்ததும் பள்ளித் தலைமை ஆசிரியா் மணிமேகலை திருக்குறள் சொல்லாத 4 மாணவா்களைப் பள்ளி கழிப்பறையைச் சுத்தம் செய்துவிட்டு வகுப்புகளுக்கு செல்லுங்கள் எனக் கூறினாராம்.

இதனால், அந்த 4 மாணவா்களும் கழிப்பறையைச் சுத்தம் செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், மாணவா்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பாா்த்த மாணவா்களின் பெற்றோா், அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் அதிா்ச்சியடைந்தனா்.

பள்ளி மாணவா்களை கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியா் மீது மாவட்ட கல்வி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் வலியுறுத்தினா்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT