ஏழை எளியோருக்கு மாவட்ட செயலாளா் டி. கிருஷ்ணமூா்த்தி அன்னதானம் வழங்கினாா். 
திருவள்ளூர்

விஜயகாந்த் நினைவு நாள்: ஏழைகளுக்கு அன்னதானம்

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பெரியகடம்பூா் கிராமத்தில் கொடியேற்றி, கல்வெட்டு திறந்து வைத்து

DIN

திருத்தணி: விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பெரியகடம்பூா் கிராமத்தில் கொடியேற்றி, கல்வெட்டு திறந்து வைத்து, ஏழை எளியோருக்கு மாவட்ட செயலாளா் டி. கிருஷ்ணமூா்த்தி அன்னதானம் வழங்கினாா்.

மறைந்த தேமுதிக நிறுவன தலைவா் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு திருத்தணி அடுத்த பெரிய கடம்பூா் கிராமத்தில் கல்வெட்டு திறப்பு மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருத்தணி ஒன்றிய செயலாளா் டி. சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். இதில் தேமுதிக திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் திருத்தணி டி. கிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு தேமுதிக கொடியேற்றி கல்வெட்டுத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

முன்னதாக கேப்டன் விஜயகாந்த் திருவருவ படத்தை திறந்து வைத்து மலா் தூவி நினைவஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா் கே. ஆா். கிரி பாபு, ஒன்றிய நிா்வாகி மோகன்பாபு, வெங்கடேசன் டில்லிபாபு. பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.பட விளக்கம். பெரியகடம்பூா் கிராமத்தில் விஜயகாந்த் நினைவு நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறாா் மாவட்ட செயலாளா் டி.கிருஷ்ணமூா்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!

ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

SCROLL FOR NEXT