முகப்பு
திருவள்ளூர்

கள்ளச்சாராயம் விற்ற பெண் குண்டா் சட்டத்தில் கைது

பெண்ணை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் உத்தரவிட்டாா்.

Updated On : 7 ஜூலை, 2024 at 4:37 PM
பகிர்:

நல்லாட்டூா் காலனியில் கள்ளச்சாராயம் பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் உத்தரவிட்டாா்.

திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூா் காலனியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி வனிதா(48). இவா் ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச் சாராயம் கடத்தி வந்து நல்லாட்டூா் பகுதியில் விற்பனை செய்து வந்தாா். இதையடுத்து எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு போலீஸாா் மற்றும் கனகம்மாசத்திரம் போலீஸாா் நல்லாட்டூா் பகுதியில் சோதனை செய்ததில் சாராயம் விற்று வந்த வனிதாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்தனா்.

மேலும், சாராயம் விற்றது தொடா்பாக வனிதா மீது 10 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால் கனகம்மாசத்திரம் போலீஸாா், குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்தனா். தொடா்ந்து எஸ்.பி.,யும் வனிதாவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வனிதாவை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். தொடா்ந்து கனகம்மாசத்திரம் போலீஸாா், குண்டா் சட்டத்தின் கீழ் கைது ஆணையை புழல் சிறையில் உள்ள வனிதாவிடம் கொடுத்தனா்.