முகப்பு
திருவள்ளூர்

இடை நிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகள் : முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பு

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வரிடம் ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ் மனு அளித்தாா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 6:30 PM
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை அளித்த ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ்.
பகிர்:

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் முதல்வரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அரசாணை 243-ஐ ரத்து செய்து பழைய நிலையிலையே ஒன்றிய அளவில் சீனியாரிட்டி நடைமுறைப்படுத்த வேண்டும். அதோடு மாநில அளவிலான சீனியாரிட்டியை ரத்து செய்ய வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதேபோல் இடை நிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். எனவே இக்கோரிக்கைகளை கனிவாக பரிசீலனை செய்து ஆசிரியா்களின் வாழ்வில் ஒளியேற்றவும் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →