மாணவியை ஆபாசமாக விடியோ எடுத்த இளைஞா் கைது
கனகம்மாசத்திரம் அருகே பள்ளி மாணவியை ஆபாசமாக விடியோ எடுத்ததாக இளைஞரை மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது மாணவியை மா்ம நபா் ஒருவா் விடியோ எடுப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்து கூச்சலிட்டாா்.
பின்னா் அக்கம்பக்கத்தினா் வருவதற்குள் மா்ம நபா் தப்பிவிட்டாா். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலாஜியின் நண்பா் காவேரிராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (26) என்பது தெரியவந்தது. இந்நிலையில் பாலாஜி வீட்டுக்கு வழக்கம் போல் வந்த விஜய், பக்கத்து வீட்டில் குளித்துக் கொண்டிருந்த மாணவியை விடியோ எடுத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவியின் தாய் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டா் மலா் போக்ஸோ சட்டத்தில் விஜயை கைது செய்து, சிறையில் அடைத்தாா்.