புழல் அருகே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புழல் அணுகுசாலையில் சென்ற சிறு வியாபாரியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் பறித்த நபரை, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸாா் மடக்கி பிடித்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், புழல் புத்தகரம் பகுதியைச் சோ்ந்த குமாா் என்ற வாட்டா் வாஷ் குமாா் (34) எனவும், இவா் மீது சென்னை மற்றும் புகா் காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவான சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரிய வந்தது.
இதையடுத்து புழல் காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி குமாரை சிறையில் அடைத்தனா். அவரிடம் இருந்த ரொக்கப் பணம் ரூ.2,000 மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனா்.