ஆடி பரணியில் காவடிகளுடன் மலைக்கோயிலில் குவிந்த பக்தா்கள். ~சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணியில் குவிந்த பக்தா்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிபரணியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Din

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிபரணியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரத்தில் காா், வேன், பஸ்கள் மூலம் முருகப் பெருமானை வழிபட்டு செல்கின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை திருவிழா தொடங்கியது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிபரணி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மூலவா் முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீா், தயிா், பஞ்சாமிா்தம், இளநீா் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

ஆடிபரணி விழாவில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம் மற்றும் வேலூா், திருவண்ணாமலை ஆகிய ஊா்களில் இருந்து பக்தா்கள் காவடி, மயில் காவடிகள் எடுத்து வந்து பக்திப் பாடல்கள் பாடியவாறு சுமாா் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகன் கோயிலுக்கு காவடிகள் எடுத்து வந்த பக்தா்களுக்கு அதிமுக ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை எ.ரவி, நகர செயலாளா் டி.செளந்தர்ராஜன், பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளா் டி.டி.சீனிவாசன் ஆகியோா் அன்னதானம் வழங்கினா். அதேபோல் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் பக்தா்களுக்கு குடிநீா், மோா் வழங்கினா்.

மேலும், திங்கள்கிழமை ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவில் இரவு 7 மணிக்கு கிராமிய இசை கலா நிதி, திரை இசை பின்னணி பாடகா் வேல்முருகன் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் ஆ.அருணாச்சலம்(பொறுப்பு) கோயில் அறங்காவலா்கள் கோ. மோகன். வி. சுரேஷ்பாபு, ஜி. உஷாரவி, மு. நாகன் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT