குடும்பத் தகராறு: தம்பதி தற்கொலை
ஆவடியில் குடும்பத் தகராறு காரணமாக தம்பதி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆவடி, அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் ஆவடி காய்கறி அங்காடியில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (36). தம்பதிக்கு தலா மகன், மகள் உள்ளனர்.
இதற்கிடையில் பிரகாஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதனை தெரிந்த கொண்ட சத்யா, பிரகாஷை கண்டித்து தகராறு செய்துள்ளார். இதன் பிறகும் பிரகாஷ் அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டிக்காமல் இருந்ததால், சத்யா மனமுடைந்துள்ளார்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை பிரகாஷ் அங்காடிக்கு வேலைக்கு சென்று விட்டு, மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது சத்யா படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து பயந்து போன பிரகாஷ் முன்னறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து ஆவடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தம்பதி சடலங்களை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.