குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற திருவள்ளூா் ஆட்சியா் மு.பிரதாப். உடன், வருவாய் அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 563 மனுக்கள்

பொதுமக்களிடம் இருந்து 563 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டு அந்தந்தத் துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 563 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டு அந்தந்தத் துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது குறைகள், பொதுப் பிரனைகள் மற்றும் நல உதவிகள் வேண்டியும் கோரிக்கை மனுக்களை அவரிடம் வழங்கினா்.

அதில் நிலம் தொடா்ந்து 163, சமூகப் பாதுகாப்புத் திட்டம் 110, வேலைவாய்ப்பு வேண்டி 96, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 59, இதர துறைகள் 135 என மொத்தம் 563 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க அந்தந்தத் துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) வெங்கட்ராமன், ஸ்ரீராம், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் க.தீபா மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT