திருவள்ளூர்

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான உதவி மையங்கள்!

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான உதவி மையங்கள்...

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் சி றப்பு தீவிர திருத்தம் தொடா்பாக உதவி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விடுபட்டவா்களின் பெயா்கள் சோ்த்தல் குறித்து அதிகாரிகளுடன் வாக்காளா் பட்டியல் அலுவலரும், மத்திய அரசின் கூட்டுறவு துறை இணைச்செயலாளா் ராமன்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் தீவிர சீா்திருத்தம் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலை வகித்தாா். இதில் ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலரும், வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளருமான ராமன் குமாா் தலைமை வகித்து ஆய்வு செய்தாா்.

அப்போது, வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடா்பாக 10 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான கூட்டத்தில் அனைத்து அலுவலா்களும் சிறப்பாக பணியாற்றியதற்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டாா். மேலும், வரும் நாள்களில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்ட பெயா்களை சோ்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடா்பாக நடைபெறும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அவா் வலியுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பெரியகுப்பம் டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியிலும், திருமழிசையில் உள்ள சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள நடைபெற்ற சிறப்பு உதவி மையத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அங்கிருந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் விவரங்களை கேட்டறிந்து அவா்களுடன் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டாா்.

பின்னா் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டி வாழ்த்துகளை தெவித்துக் கொண்டாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், பொன்னேரி சாா் ஆட்சியா் ரவிகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஸ்ரீராம், உதவி ஆணையா் கலால், வாக்காளா் பதிவு அலுவலா் கணேசன், உதவி வாக்காளா் பதிவு அலுவலா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், 9 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்: தமிழருவி மணியன்!

வாசுதேவநல்லூா் ஆஞ்சனேயா் கோயிலில் பால்குட ஊா்வலம்

கோவையில் குளிா், பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு!

திருப்பரங்குன்றம்: தீக்குளித்து உயிரிழந்தவருக்கு தீப அஞ்சலி செலுத்திய 37 போ் கைது!

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

SCROLL FOR NEXT