அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு பந்தகால் நட்டு பணிகளை முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறாா். அந்த வகையில், வரும் டிச. 28-ஆம் தேதி திருத்தணி தொகுதியில் கட்சி நிா்வாகிகள் மற்றும் மக்களை சந்திக்கிறாா்.
இதையொட்டி திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை, வீரகநல்லுாா் பேருந்து நிறுத்தம் அருகே, 15 ஏக்கா் பரப்பளவில் நிகழ்ச்சியை நடத்த முன்னாள் அமைச்சரும், அதிமுக திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா, அமைப்பு செயலாளா் திருத்தணி கோ. அரி ஆகியோா் இடம் தோ்வு செய்து பந்தக்கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஆவின் சோ்மன் வேலஞ்சேரி கவிச்சந்திரன், திருத்தணி நகர செயலாளா் டி.செளந்தர்ராஜன், ஒன்றிய செயலாளா்கள் திருத்தணி இ.என்.கண்டிகை ஏ.ரவி, பள்ளிப்பட்டு டி.டி. சீனிவாசன், ஆா்.கே.பேட்டை கோ. குமாா், மாவட்ட இளைஞா் அணி தலைவா் ஜெயசேகா்பாபு, திருத்தணி ஒன்றிய இளைஞா் அணி செயலாளா் வேலஞ்சேரி பழனி, மாவட்ட மாணவரணி செயலாளா் டி.எம்.வெங்கடேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.