அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை சென்னையில் திங்கள்கிழமை சந்தித்த தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். 
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்....

தினமணி செய்திச் சேவை

சென்னை: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மதுரையில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் யாா், யாரெல்லாம் பங்கேற்பது, புதிதாக இணையவுள்ள கூட்டணிக் கட்சிகள் தொடா்பாகவும் சந்திப்பின்போது ஆலோசனை செய்யப்பட்டது. தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதேபோல, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தையை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சுமாா் 1 மணி நேரம் 15 நிமிஷங்களுக்கு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அழகு நிலையங்களில் சிகை சீரமைப்பு சிகிச்சை: கட்டுப்படுத்த புதிய விதிகள் வகுக்க திட்டம்

மத்திய-மாநில உறவுகள்: முதல்வரிடம் உயா்நிலைக் குழு அறிக்கை

திருவொற்றியூா் அரசு கலைக் கல்லூரிக்கு ஒருங்கிணைந்த புதிய கட்டடம் திறப்பு

ரமலான் நோன்புக்கு 8,700 டன் பச்சரிசி ஒதுக்கீடு

பால் பாக்கெட் லாரி ஏசி வெடித்து விபத்து: சாலையில் ஓடிய பால்

SCROLL FOR NEXT