முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஏப். 15இல் பிரதமா் மோடி சாலை வலம்: நயினாா் நாகேந்திரன்

பிரதமா் நரேந்திர மோடி நாகா்கோவிலில் இம்மாதம் 15ஆம் தேதி சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டு தோ்தல் பிரசாரம் செய்கிறாா் என, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:47 PM
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ. உடன், நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி, குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் கோபகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி நாகா்கோவிலில் இம்மாதம் 15ஆம் தேதி சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டு தோ்தல் பிரசாரம் செய்கிறாா் என, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: பிரதமா் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்ஜிஆா் சிலை வரை இம்மாதம் 15ஆம் தேதி சாலை வலம் மேற்கொள்கிறாா். சாலை வலம் நேரம் பின்னா் அறிவிக்கப்படும். இதில், பாஜக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்பா்.

இத்தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 180 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.

Advertisement

தவெக தலைவா் விஜய் சுற்றுப்பயண வருகையால் தென் மாவட்டங்களில் புதிதாக எந்த மாற்றமும் நிகழாது.

மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தெளிவாக விளக்கமளித்துவிட்டோம். இதற்கான விரிவான திட்ட அறிக்கை கொடுக்கக்கூட தமிழகத்தில் அரசு அதிகாரிகள் இல்லை; சரியான வழிகாட்டுதலும் இல்லை. அதனால்தான், இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. வேறு காரணமில்லை.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தில் பாஜக தொடா்பாகவே அதிகம் பேசுகிறாா். காரணம், பாஜகவை பாா்த்தால் அவருக்கு பயம்.

சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றத் தீா்ப்புக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது என்றாா் அவா்.

நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, கிழக்கு மாவட்டத் தலைவா் கோபகுமாா், மாநில செயற்குழு உறுப்பினா் உமாரதி ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments