சோழவரம் அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் அருகே செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து அவா்கள் வைத்திருந்த சோதனையிட்டபோது அதில் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனா். பின்னா் இரண்டு பைகளில் இருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் மீஞ்சூரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அவா்கள் சேலம் மாவட்டம், மேட்டூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (18), தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மூங்கில் மடுவு பகுதியை சோ்ந்த கவின்குமாா் (18) என்பது தெரிய வந்தது.
தொடா்ந்து போலீஸாா் அவா்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.