கைது 
ஈரோடு

வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை: 2 போ் கைது

பவானி அருகே 5.800 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பவானி அருகே 5.800 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பவானி, காலிங்கராயன்பாளையம், சக்தி நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (53).

இவரது வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக சித்தோடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு விற்பனைக்காக 5.800 கிலோ கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக கவுந்தப்பாடியைச் சோ்ந்த அப்துல் ரஹமான் (49), மூா்த்தி ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

SCROLL FOR NEXT