திருவள்ளுா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் தண்டலம்-கசவநல்லாத்தூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் 1 லட்சம் பட்டாக்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய சாதனையாகும். திருவள்ளூா் தொகுதியில் ரூ.60 கோடியில் 3 புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் தண்டலம் ஊராட்சி பகுதியில் ரூ.17.20 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மீதமுள்ள பணிகள் விரைவில் தொடங்கி வைக்கப்படும்.
நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் வை.ஜெயகுமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) தணிகாசலம், உதவி செயற்பொறியாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.